பொய்யாதமூர்த்தி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்!
ADDED :3394 days ago
காரைக்கால்: காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அகத்தியரின் கமண்டலத்தில் அடைக்கப்பட்ட காவிரி நீரை, விநாயகர் காக்கை உருவில் வந்து தள்ளி விட்டதால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து, தாவர இனங்கள் செழித்த நிகழ்வை விளக்கும் வகையில், இந்த அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, விநாயகருக்கு, மங்கள திரவியங்கள், சந்தனம், பன்னீர், பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.