உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் கோயில் விழாவில் அம்மனாக வழிபட சிறுமிகள் தேர்வு!

மேலூர் கோயில் விழாவில் அம்மனாக வழிபட சிறுமிகள் தேர்வு!

மேலூர் : மேலூர் வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோயில் விழாவில் அம்மனாக வழிபட ஏழு சிறுமிகள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.மேலூர் அருகேவுள்ளது வெள்ளலூர். 60 கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதியை வெள்ளலூர் நாடு என மக்கள் அழைக்கின்றனர். இப்பகுதியில் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு விழாவில் அம்மனாக கவுரவிக்கப்படுவர். மூண்டவாசி, வேங்கபுலி, சமட்டி, நக்காயன், சாயும் படைதாங்கி, வெக்காலி, சலிப்புலி, திருமா, செம்புலி, நண்டக் கோப்பன், பூலான் மழவராயன் எனப்படும் 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற ஏழு சிறுமிகளும் 15 நாட்கள் இரவில் கோயிலில் தங்கி பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவர்.15வது நாளில் பெண்கள் மது கலயம் மற்றும் சிலைகளை சுமந்து கொண்டும், ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றிக் கொண்டும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் விழா நடக்கும்.விழா நடக்கும் 15 நாட்களில் இந்த 60 கிராமத்தினர் கடும் விரதம் இருப்பர். அசைவு உணவுகளை தவிர்த்து விடுவர். பச்சை மரங்கள் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், மண்ணை தோண்டுதல் போன்ற பணிகளும் இந்த நாட்களில் நடக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !