உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்!

கோயிலில் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்!

பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது வி÷ சஷமாகும்.

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!

பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும் என்பது இதன் பொருள். பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும். கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்.

மூன்று முறை வலம் வந்தால் : இஷ்ட சித்தி அடையலாம்.
ஐந்து முறை வலம் வந்தால் :- வெற்றிகள் கிட்டும்.
ஏழு முறை வலம் வந்தால் :- நல்ல குணங்கள் பெருகும்.
ஒன்பது முறை வலம் வந்தால் :- நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.
பதினோரு முறை முறை வலம் வந்தால் :- ஆயுள் பெருகும்.
பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :- செல்வம் பெருகும்.
நுõற்றியெட்டு முறை வலம் வந்தால் :- அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !