உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.


கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் இன்று காலை 10:00 மணிக்கு, ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வர்ர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி யாகம், மகாசங்காபிஷேகம் நடந்தது. மாலை கலசப்புறப்பாடும் ஞானாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு ஞானாம்பிகை அம்மன் சமேத சந்திரசேகர சுவாமி வீதியுலா நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகி வெற்றிவேல், உபயதாரர் கண்ணன், விநாயகம், வெங்கடேசன், சிவாச்சாரியார்கள் கவுரிசங்கர், வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !