உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூரில் பாம்பாட்டி சித்தர் படம் வெளியீட்டு விழா

பேரூரில் பாம்பாட்டி சித்தர் படம் வெளியீட்டு விழா

தொண்டாமுத்தூர்; பேரூரில், பஞ்ச சித்ரா பவுண்டேஷன் பார் ஆர்ட்ஸ் அண்டு கல்ச்சர் அமைப்பு சார்பில், பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்படம் வெளியீட்டு விழா நடந்தது.


பஞ்ச சித்ரா பவுண்டேஷன் பார் ஆர்ட்ஸ் அண்டு கல்ச்சர் அமைப்பு சார்பில், ஓவியர் பருதி ஞானம் வரைந்த, பாம்பாட்டி சித்தரின் திருவுருவப்பட ஓவியம் வெளியீட்டு விழா பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது. இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், சுவாமி வேதாந்தானந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பாம்பாட்டி சித்தரின் திருவுருவ படத்தை திறந்து, வெளியிட்டனர். இதன் முதல் பிரதியை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் வழங்க, சென்னையைச் சேர்ந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனர் ராம் ராமநாதன் பெற்று கொண்டார். இவ்விழாவில், பஞ்ச சித்ரா பவுண்டேஷன் பிரீத்தி லட்சுமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !