குச்சிப்பாளையம் கோவிலில் 11ம் தேதி தீமிதி உற்சவம்
ADDED :3714 days ago
கிள்ளை: கிள்ளை அருகே குச்சிப்பாளையம் காளியம்மன், முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 11ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது. அதனையொட்டி, நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக, தீபாராதனை நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை சந்தனக் காப்பு அலங்காரமும் மாலையில் தீ மிதி உற்சவமும் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.