கிரிஜாம்பாள், கவீஸ்வரர் கோவில் இன்று கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று துவங்குகிறது. இன்று காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (ஜூலை, 10) காலை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை, 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. 11 ம் தேதி காலை, 7 மணிக்கு, மங்கள இசையுடன் பூஜைகள் துவங்கி, காலை, 9.45 மணிக்கு யாக சாலையில் இருந்து விமானம் மற்றும் மூலாலயத்திற்கு கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும், காலை, 10.25 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, கிரிஜா ஹரிஹரன் வழங்கும், மீனாட்சி கல்யாணம் இசை சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவில் அறக்கட்டளை தலைவர் மதியழகன், செயலாளர் துக்காராம்ராவ், பொருளாளர் நடராஜன் செய்துள்ளனர்.