சிறுவள்ளிக்குப்பம் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேக விழா
விழுப்புரம்: சிறுவள்ளிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில், வரும் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி, சிறுவள்ளிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை வாஸ்து சாந்தி, கடம் புறப்பாடு, முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. நாளை காலை இரண்டாம் கால பூஜை, இரவு மூன்றாம் கால பூஜை, நான்கு வேத பாராயணம், நாதகீத உபச்சாரம், தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (11ம் தேதி) காலை 6:30 மணிக்கு கோ பூஜை, கடம் புறப்பாடு, காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் செல்வ விநாயகர், பாலமுருகன், ஹரிஹர புத்திர அய்யனாரப்பன், பொறையாத்தமன், திரவுபதியம்மன் சுவாமிகள் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10:15 மணிக்கு திரவுபதியம்மன் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.