உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி வேதபுரீ தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்: நாளை நடக்கிறது

தேனி வேதபுரீ தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்: நாளை நடக்கிறது

தேனி, : தேனி வேதபுரீயில் சுவாமி சித்பவாநந்த ஆஸ்ரமத்தின் ஓர் அங்கமான தட்சிணாமூர்த்தி வித்யாபீடம் விளங்குகிறது. நகரின் தெற்கு பகுதியில் முல்லையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இங்கு ஒன்பது அடி உயரத்திலான தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், சாரதம்பாள், உற்சவர், மகாலட்சுமி, நாராயணர்,சூர்ய நாராயணர், தேவகுரு, வியாழபகவான் என 9 தெய்வங்களுக்கும் தனி தனி சன்னிதி உள்ளது. நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரங்களை குறிக்கும் விதமாக ஐந்து விமான கலசங்கள் அமைந்துள்ளன. மூலவரையும் விமானத்தையும் ஒருசேர தரிசிக்கலாம். பக்தர்கள் தாங்களாகவே பூஜை செய்யும் வகையில் கிழக்கு பகுதியில் காசி விஸ்வநாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புகள் பெற்ற இக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பிஷேகத்தை முன்னிட்டு 3ம்தேதி முதல் யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் துவங்கின. வாஸ்து சாந்தி, முதல் காலம் பூஜைகள் துவங்கி ஏழாம் கால யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை கும்பாபிஷேகத்தையொட்டி காலை 6.30 மணிக்கு எட்டாம் கால பூஜைகள் துவங்குகிறது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. 9.45 மணியில் இருந்து 10.45 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !