மாத்தாம்மன் கோவிலில்10ல் தீமிதி திருவிழா
ADDED :3482 days ago
அயத்துார்:அயத்துார் மாத்தாம்மன் கோவிலில், வரும், நாளை தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்து, அயத்துார் அருந்தபுரத்தில் அமைந்துள்ளது, மாத்தாம்மன் கோவில். இங்கு, 14ம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை நாகதேவதை பூஜை நடந்தது. இன்று மாலை, 3:00 மணிக்கு வனத் திருவிழாவும், இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், இரவு, 10:00 மணிக்கு கவுரி அம்மன் மேடை ஏறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை ,6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், அதை தொடர்ந்து இரவு அம்மன் மலர் அலங்காரத்தில் திருவீதிரயுலாவும் நடைபெறும். அதன்பின், 11ம் தேதி காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு சக்தி சாந்த பூஜையுடன் தீமிதி திருவிழா நிறைவு பெறும்.