உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்னகிரீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

ரத்னகிரீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பெசன்ட்நகர்;பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஐந்தாவது மஹா கும்பாபிஷேகம், நாளை மறுநாள் நடைபெற உள்ளது.பெசன்ட் நகரில், ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலின், ஐந்தாவது மஹா கும்பாபிஷேகம், நாளை மறுநாள் காலை, 7:45 மணியளவில், காஞ்சி ஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது. கடந்த 6ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை, 7:15 மணியளவில், நான்காம் கால பூஜை, மண்டபத்ரா தேவதா பூஜைகளும், மாலை 5:00 மணியளவில்,ஐந்தாம் கால பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !