பராசக்தி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3408 days ago
கடலுார்: நத்தப்பட்டு பஞ்சாயத்து பெண்ணை நதிக்கரை அருகே உள்ள பெண்ணை பராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (9ம் தேதி) மாலை 5:30 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (10ம் தேதி) காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடாகி, 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு பெண்ணை பராசக்தி மாரியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவமி வீதியுலா நடக்கிறது.