உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யா வைகுண்ட சுவாமி கோவிலில் பால்முறை விழா

அய்யா வைகுண்ட சுவாமி கோவிலில் பால்முறை விழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, அய்யா வைகுண்ட சுவாமி கோவிலில், நான்காம் ஆண்டு பால்முறை திருவிழாவை முன்னிட்டு, வீதிஉலா, பக்தர்கள் சந்தன பால்குடம் எடுத்து வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி, தாமரை ஏரிக்கரையோரம் உள்ளது அய்யா வைகுண்ட சுவாமி கோவில். அந்த கோவிலில், நான்காம் ஆண்டு பால்முறை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அய்யா வைகுண்ட சுவாமியின் வீதிஉலா, நேற்று நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் சந்தன பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து, மாலை 7:00 மணிக்கு, அய்யா வைகுண்ட சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அய்யா வைகுண்ட சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !