உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பூஜை!

பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன பூஜை!

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜை நடந்தது.  கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள  பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு நடராஜருக்கு 21 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந் தது. 8:30 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 10:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு  அலங்காரம், 10:30 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சி.என்.பாளையம்:  மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று காலை 11:00 மணிக்கு விநாயகர், நடராஜர், சிவகாமசுந்தரி, வள்ளி தேவசேனா  சுப் பரமணியர், மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர்  சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடராஜர், சி வகாம சுந்தரி ஆலய உள் பிரகார உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !