உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு: அகர ஆலம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.   சேத்தியாத்தோப்பு அடுத்த அகர ஆலம்பாடி கிராமத்தில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதுப்பி க்கப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 8 ம் தேதி காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், விநாயகர்  வழிபாடு, கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை முதல்கால யாக பூஜை, பூர்ணாஷூதி நடைபெற்றது. 2ம் நாளான நேற்று  முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை, புதிய விக்கிரகங்களுக்கு கண் திறத்தல், அஷ்டாதச கிரியைகள், 11:00 மணிக்கு பூர்ணாஹூதி,  அஷ்டபந்தனம் சாற்றுதலும், மாலை மூன்றாம் கால யாக பூஜை,  லஷ்மி பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. ௩ம் நாளான நேற்று  காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, ஸ்பரிசாஹூதி, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து காலை 8:45 மணிக்கு கடம்  புறப்பாடாகி கோவிலை வலம் வந்து காலை 10:00 மணிக்கு விமானங்களுக்கும், 10:15 மணிக்கு மூலவர் வேதநாயகர், வேதநாயகி சுவாமிகளுக்கு  புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !