ஆத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3491 days ago
மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தில் உள்ள ஆத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையெ õட்டி, கடந்த 8ம் தேதி மாலை, விக்னேஸ்வர பூஜையுடன், யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 8:30 மணிக்கு, முருக்கேரி சீனிவாச சாமிகள் மற்றும் நாகராஜ் குருக்கள் குழுவினர், ஆத்தீஸ்வரர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.