உச்சிமகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED :3419 days ago
மடத்துக்குளம் அருகே சாலரப்பட்டியில் உள்ள ( அமராவதி வடிப்பாலை அருகில்), உச்சிமாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா நிகழ்ச்சிகள், கடந்த 8ம் தேதி காலை மங்கள இசையோடு துவங்கியது. விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம்காலயாக பூஜையும், கோ பூஜையும், காலை, 9:30 மணிக்கு கோவில் கும்பாபிேஷகமும் நடந்தது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்தனர்.