உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னுார் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னுார் ; அன்னுார் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்னுார், கோவை ரோட்டில், செல்வ விநாயகர் கோவிலில், கன்னிமூல கணபதி, முருகப் பெருமான், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக சன்னதியில், பல லட்சம் ரூபாயில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. மாலையில், காப்பு கட்டுதல், வேள்வி பூஜை துவக்கம், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்றுமுன்தினம் (10ம் தேதி) அதிகாலையில் யாக பூஜை நடந்தது. காலை 7:10 மணிக்கு விமானம், செல்வ விநாயகர், கன்னி மூல கணபதி, முருகர், துர்க்கை, தட்சிணா மூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சிவாச்சார்யார்கள் நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !