குறிச்சி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3418 days ago
குறிச்சி ;சுண்டக்காமுத்துாரிலுள்ள ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சுண்டக்காமுத்துார் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள ஐயப்பன் கோவில், ௧௪ ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இரண்டாவது கும்பாபிஷேக விழா, ௫ம் தேதி காலை, நிர்மால்ய தரிசனத்துடன் துவங்கியது.கடந்த 10ம் தேதி அதிகாலை, நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம், ௭:௦௦ மணிக்கு, பிரம்மசுத்தி பிரதிஷ்டை கலசாபிஷேகம், பஞ்சாபிஷேகம், அஷ்டாபிஷேகமும் நடந்தன. இதையடுத்து, தாந்திரீக குலபதி கோவில் தந்தரி மணிகண்டன் பட்டத்திரிபாடு, மேல்சாந்தி சசிநம்பூதிரி, கோவில் நம்பூதிரி விஷ்ணுசர்மா ஆகியோர், கும்பாபிஷேகத்தை நடத்தினர்.தொடர்ந்து, மகா தீபாராதனை, கொடி இறக்குதல், அன்னதானம் மற்றும் உச்சி பூஜை நடந்தன. திரளானோர் பங்கேற்று, ஐயப்பனை வழிபட்டுச் சென்றனர்.