வைத்தியநாத பெருமான் கோவிலில் கும்பாபிேஷகம்
உடுமலை: உடுமலை அனிக்கடவு ராமச்சந்திராபுரத்தில், வைத்தியநாத பெருமான் கோவில் கும்பாபிேஷக விழா நாளை நடக்கிறது. அனிக்கடவு ராமச்சந்திராபுரத்தில், பழமை வாய்ந்த வைத்தியநாத பெருமான் கோவில் மற்றும் விநாயகர், செல்வமுத்துக்குமாரசாமி, மாகாளியம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா நேற்றுமுன்தினம், திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார், திருமகள் மற்றும் நிலத்தேவர் வழிபாடு நடந்தது. நேற்று கணபதி வேள்வி, மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், காப்பணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலையில், இறையருள் சக்திகளை திருக்குடத்தில் எழுந்தருள செய்தல் உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று, காலை 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, நினைவு திருமஞ்சனம், நவக்கிரகம் இடுதல், இரண்டாம் கால வேள்வி, மாலை 4:00 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14 ம் தேதி) காலை 6:00 மணிக்கு, இறைத்திரு மேனிகளுக்கு ஆனைந்து ஆட்டி காப்பணிவித்தல், காலை 7:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் ஞான உலா, காலை 9:00 மணிக்கு, கும்பாபிேஷகமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.