உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயிபாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா

சாயிபாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா

புதுச்சேரி: காலாப்பட்டு சீரடி சாயிபாபா கோவிலில் வரும் 19ம் தேதி குரு பூர்ணிமா விழா நடக்கிறது. காலாப்பட்டு சீரடி சாயி நகரில் உள்ள சீரடி சாயிபாபா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குருபூர்ணிமா விழா நடைபெறும். இந்த ஆண்டு வரும் 19ம் தேதி குரு பூர்ணிமா பூஜை நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து ஸ்ரீசாய் சத்சரித்திர பாராயணம், 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம் நடக்கிறது. பின்னர் ஆராத்தி நடக்கிறது.மாலையில் ராஜன், கோபாலகிருஷ்ணனின் சாயி பஜன்ஸ் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாயிபாபா சேவா சமிதி மக்கள் தொடர்பு அதிகாரி சாயிராம் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !