திருக்கோவிலூர் தபோவனத்தில் 27ம் தேதி நவராத்திரி விழா துவக்கம்
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில் வரும் 27ம் தேதி சரத் நவராத்திரி விழா துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில் வரும் 27ம் தேதி காலை 8 மணிக்கு கடஸ்தாபனத்துடன் சரத் நவராத்திரி விழா துவங்குகிறது. மறுநாள் (28ம் தேதி) முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை தினசரி காலை 5.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையும் ஸ்ரீ கர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்ரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை, ஸ்ரீ ஞானாம் பிகைக்கு சகஸ்சர நாமார்ச்சனையும் நடக்கிறது. தினசரி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை துர்கா ஸப்தஸதீ பாராயணம், மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பக்தி பாடல்கள் இகைப் படுகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ பகவதி சேவை, 5ம் தேதி மதியம் 1.30 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 6ம் தேதி காலை 5 மணிக்கு சுவாஸினி, தம்பதி பூøஐயுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், ஸ்ரீ மஹிஷாசூரமர்த்தினி புறப்பாடு, சிறப்பு அன்னதானம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தபோவன நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.