உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்பூர்: அலகுமலை அம்மாபாளையம் செல்வகணபதி, மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. திருப்பூர், கண்டியன்கோவில் அருகேயுள்ள அலகுமலை அம்மாபாளையத்தில் உள்ள செல்வகணபதி, மாகாளியம்மன், கன்னிமார் கோவிலில் திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. நாளை அதிகாலை, 3:30 மணிக்கு இரண்டாம் காலயாக வேள்வி துவக்கம், விநாயகர் வழிபாடு, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாஹூதி, கலசம் புறப்படுதல், கோபுர கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம் நடைபெற உள்ளன. காலை, 5:00 முதல், 5:45 மணிக்குள் கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடக்கிறது. விழாவையட்டி, 6:00 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது. விழா, ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மேற்கண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !