சகோதரி நிவேதிதையின் பிறந்த ஆண்டை முன்னிட்டு சிறுகதைப் போட்டி!
சென்னை: சகோதரி நிவேதிதையின் பிறந்த ஆண்டை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது. இந்த வருடம் 150-வது பிறந்த ஆண்டு என்பதால் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறப்பான முறையில் இந்த சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. சிறுகதைகள் சமுதாயத்தின் சம காலத்திய போக்கை, பலங்களை, பலவீனங்களைக் காட்டும் கண்ணாடிகள்.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை இலக்கியத்தைப் போற்றும் வகையில் சமூகப்பற்றை, வாழ்வியல் மதிப்பீடுகளை, இலக்கிய இன்பத்தைத் தரக்கூடிய சிறுகதைகளுக்கான போட்டியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. மூன்றாம் ஆண்டு சிறுகதைப் போட்டியின் மையக் கருத்து இதோ:
1. சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட, அல்லது, 2. நாட்டின், தனிமனிதனின் வளமான எதிர்காலத்தை மையமாகக் கொண்ட, அல்லது, 3. சமுதாயத்தில் வேண்டாதவற்றை சரி செய்கிற வழிமுறைகளை வலியுறுத்தும் சிறுகதைகள் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
2016 அக்டோபர் முதல் 2017 அக்டோபர் வரை, சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்த ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சுவாமி விவேகானந்தர், நம் நாட்டுப் பெண்களுக்காகப் பாடுபட ஒரு பெண்சிங்கம் தேவை என்றார். சுவாமிஜியின் பெண் சிங்கமான சகோதரி நிவேதிதை, பாரதத்தையே தம் சொந்த நாடாகக் கருதி, சேவையிலும், பெண் கல்வித் தொண்டிலும் தன்னை அர்ப்பணித்தபபடி இம்மண்ணிலேயே தம் இன்னுயிரை நீத்தவர். சகோதரி ஆங்கில ஆட்சியின் தீமைகளை எதிர்த்து நின்று போராடியவர், பிறரையும் போராட வைத்தவர்.
சுவாமிஜி வலியுறுத்திய அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய கருத்துகளை ஒரு சிங்கமாக இருந்து நாடெங்கும் கர்ஜித்தார் சகோதரி, ஒவ்வொரு துறையிலும் பாரதத்தின் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்தார். மகாகவி பாரதியின் குருவான சகோதரியின் வாழ்க்கை, அவரது தொண்டு, சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாய் அவர் ஆற்றிய பணிகளுக்கெல்லாம் உறுதுணையாய் விளங்கிய தன்மை போன்றவற்றை மையமாகக் கொண்ட கதைகள் இப்போட்டியில் முக்கியமாக வரவேற்கப்படுகின்றன. பொறுப்புள்ள எழுத்தாளர்களே! தேசத்தை நேசிக்கும் நல்லவர்களே! மாணவர்களே! ஆசிரியர்களே! பெண்மணிகளே! நீங்கள் காணும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போக்கு, விடாமுயற்சி, மனவலிமை, நாட்டின் வறுமையை எதிர்த்துப் போராடும் குணம், கற்கும் திறன் போன்றவற்றைக் கண்டு நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய உங்கள் நம்பிக்கைகளை மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் கதைகளாக எழுதி அனுப்பி பரிசு பெறுங்கள்.
சிறுகதைகளை அனுப்பும்போது கவனிக்க வேண்டியவை:
*ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்குள் சிறுகதைகள் இருக்க வேண்டும்.
*வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
*கதைகளைத் தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம்.
*இணையதளம்/ வேறு இதழ்களில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.
*தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
*சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழி கடிதம் கதையுடன் இணைக்கப்பட வேண்டும்.
*முடிவு தெரியும் வரை வேறு பத்திரிகைகளுக்கு உங்கள் கதை அனுப்பப்படாது என்ற உத்தரவாதம் தேவை.
*மின்னஞ்சலில் கதை அனுப்புபவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிட்டு ண்ணூதி@ஞிடஞுணணச்டிட்ச்tட.ணிணூஞ் என்ற முகவரிக்கு தணடிஞிணிஞீஞு எழுத்துருவில் அனுப்பவும்.
*கதைகளைப் பரிசீலிக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
*போட்டி முடிவுகள் செப்டம்பர் 2016 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.
* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.
* கதைகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி:ஜூலை 25, 2016
முதல் பரிசு: ரூ. 10.000/.
இரண்டாம் பரிசு: ரூ. 8.000/.
மூன்றாம் பரிசு: ரூ. 6.000/.
2 ஊக்கப் பரிசுகள் (ரூ.2,000/. வீதம்)- ரூ.4,000/.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,
ஸ்ரீராமகிருஷ்ண மடம்,
31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர்,
சென்னை-600004. போன்:044-2462 1110