உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலும், கும்பாபிஷேகம் நடந்த தினத்திலும் என, இரு வருஷாபிஷேகங்கள் நடக்கும். (ஜூலை 13ல்) கும்பாபிஷேக தின ஆனி மாத வருஷாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மனிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதன் பின் மூலவர் வள்ளி, தெய்வானை, அம்பாள் ஆகிய சன்னிதி விமானங்களுக்கு போத்தி மார் மூலமும்,சண்முகர் சன்னிதி விமானத்திற்கு சிவாச்சாரியார் மூலமும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு பட்டாச்சாரியார் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !