பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3486 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, கடந்த 8ம் தேதி கொடியேற்றப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. இன்று 14ம் தேதி சக்தி கரகம் ஊர்வலமும் நாளை (15ம் தேதி) மாலை தீ மிதி விழாவும் 17ம் தேதி மாலை தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.