ஊத்துக்கோட்டை பொன்னியம்மன் பால்குட விழா
ADDED :3412 days ago
ஊத்துக்கோட்டை: பொன்னியம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு பால்குடம் எடுத்தல் விழா, வரும், 17ம் தேதி நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், நெல்வாய் ஊராட்சியில் உள்ளது பொன்னியம்மன் கோவில். இக்கோவிலில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், திரளான பக்தர்கள் அம்மனை வழிபடுவர். இக்கோவிலில், வரும், 17ம் தேதி, மூன்றாம் ஆண்டு பால்குடம் எடுத்தல் விழா நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 17ம்தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணிக்கு, பால்குடம் எடுத்தல், மாலை 6:00 மணிக்கு, நெய்விளக்கு பூஜை நடைபெறுகிறது.