உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில் 25ம் ஆண்டு ஹரே ராம பஜனை விழா

ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில் 25ம் ஆண்டு ஹரே ராம பஜனை விழா

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், கச்சூர் ஊராட்சி, ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில் உள்ளது. பட்டாபிராம சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டு ஹரே ராம பஜனை விழா நடைபெறுவது வழக்கம். நாளை (15ம் தேதி), 25ம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாளை வெள்ளிக்கிழமை காலை, 6:05 மணிக்கு அகண்ட பஜனை துவங்கி, 24 மணி நேரம் ஹரே ராம சங்கீத கீர்த்தனம் நடைபெறும். மறுநாள், 16ம் தேதி, காலை, 6:05 மணிக்கு விசேஷ பஜனைகள், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை, 9:00 மணிக்கு விசேஷ கோ பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !