உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு!

அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு!

நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை  உத்தரானப்  புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர். தட்சிணாயனம் மழைக்காலத்தின்  தொடக்கத்தையும் உத்தரா யனம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. உத்தாரயனக் காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து  தெற்காகவும். ஆடி முதல் மார்கழி வரை  தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால்  உண்மையில்  சூரியன் அவ்வாறு பயணிப்பதில்லை. நீள்வட்டப்  பாதையில் சூரியனைச் சுற்றிவரும் பூமியால் ஏற்படுவதே அது. பூமியிலிருந்து  பார்க்கும் நமக்கு சூரியன் நகர்வதாகத் தோற்றமளிக்கிறது. இது  காட்சிப்பிழை அல்லது பூமியின் இடமாறு தோற்றப்பிழை. பூமி  தெற்கு-வடக்காகச் செல்வதே உண்மை. டிசம்பர் 21-ல் நீள்வட்டப் பாதையில்  ஆறுமாதப் பெயர்ச்சியை முடித்து. சூரியனுக்கு மறுபுறம்  திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச்  செல்லும். ஆனால் நமக்கு சூரியன் தெற்கிலிருந்து  வடக்கு நோக்கிச் செல்லுவதைப்போல் தெரியும்.

தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்கம சக்திகள் வெளிப்படுவதாகவும், பிராண வாயு  அதிகமாகக்  கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள்  கூறுகின்றன. ஆடி மாதம் பி றந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது. ஆனால் முதல் மூன்று நாட்கள் ஆறுகளுக்கு  தோஷமான நாளாகக் கருதப்படுவதால், அதன் பிறகு நீராடுவது நல்லதென்பர். ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி  வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும்.  கோவிலில் உள்ள குளத்தில் நீராடும்போது வடக்கு திசை நோக்கி நீராட  வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !