காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அருகே மானியம் ஆடூர் கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காட்டுமன்னார் கோவில் அடுத்த மானியம் ஆடூர் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. குலோத்துங்கசோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் சிதிலமடைந்தது. 1945ம் ஆண்டு இக்கோவிலில் உள்ள கல்வெட்டை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மானியம் ஆடூர் ஓம் நமச்சிவாயா டிரஸ்ட் சார்பில் கடந்த 2009ம் ஆண்டு முதல் திருப்பணிகள் துவங்கியது. தேவையான உதவிகள் இல்லாமல் கோவில் பணி பாதிக்கப்பட்டது. கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட சிவலிங்கம், வள்ளி தெய்வானை, அண்ணாமலையார், கமலாம்பிகை, தட்சணாமூர்த்தி, அம்மன், சண்டிகேஸ்வரர், துர்கை அம்மன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சிலைகள் பாதுகாக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.இக்கோவில் திருப்பணிக்கு உதவி செய்ய விரும்பும் பக்தர்கள் "மானியம் ஆடூர் ஓம் நமச்சிவாயா டிரஸ்ட், மானியம் ஆடூர், இந்தியன் வங்கி, கொள்ளுமேடு - கிளை என்ற வங்கிக்கணக்கில் தாங்கள் செய்யும் உதவித் தொகையை செலுத்தலாம். டிரஸ்டி ரத்தினசபாபதி திருப்பணிகளை செய்து வருகிறார். திருப்பணிக்கு உதவ விரும்புபவர்கள் 90436 11574 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.