அக்னி மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :5132 days ago
புவனகிரி:பு.மணவெளி அக்னி மாரியம்மன் கோவிலில் நாளை (16ந் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.புவனகிரி அடுத்த பு.மணவெளியில் உள்ள பால விநாயகர், பாலமுருகன் மற்றும் அக்னி மாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. திருப்பணி வேலைகள் முடிந்துள்ள நிலையில் இன்று (15ந் தேதி) காலை அக்னி மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து முதல்கால யாக சாலை, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளையடுத்து நாளை (16ம் தேதி) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை பு.மணவெளி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.