சஞ்சீவ்ராய பெருமாள் கோவில் விழா
ADDED :5132 days ago
உடுமலை : உடுமலை தும்பலபட்டி சஞ்சீவ்ராய பெருமாள் கோவிலில், முதலாமாண்டு விழா இன்று நடைபெறுகிறது. உடுமலை அருகேயுள்ள தும்பலபட்டி கிராமத்திலிருந்து 2கி.மீ., தூரத்தில், 900 அடி உயரத்தில் மலை உச்சியில், பழமை வாய்ந்த சஞ்சிவ்ராய பெருமாள் கோவில் உள்ளது. பராமரிப்பில்லாத கோவிலை பொதுமக்கள் நிதி வசூலித்து கடந்தாண்டு மலை மீது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதால், முதலாமாண்டு விழா இன்று (15ம் தேதி) நடைபெறுகிறது. காலை 7.30 மணி முதல் 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், நெய்வேத்யம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.