உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை: புரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகளுக்காகவும் நடை திறக்கப்படுவது வழக்கம். ஓணம் பண்டிகைக்காக செப்.,7 மாலை, நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகளும், நான்கு நாட்கள் ஓணம் விருந்தும் நடந்தன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தனர். பூஜைகள் முடிந்து, 11ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து, புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை இன்று மாலை, 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். இன்று மாலை நடை திறந்தபின் வேறு பூஜைகள் ஏதும் இருக்காது. நாளை அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். அத்துடன் சிறப்பு பூஜைகளான உதயாஸ்தமன பூஜை மற்றும் படி பூஜை ஆகியவையும், பக்தர்களின் நேர்த்திக்கடன் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு ராக்கால பூஜை முடிந்து, அய்யப்பனுக்கு விபூதி அபிஷேகம் செய்விக்கப்பட்டு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !