உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ் வசதி

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ் வசதி

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம்புதூர், கரிச்சிபாளையம் கிராமங்களுக்குட்பட்ட பகுதியில் மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவில்கள் உள்ளன. சிதிலமடைந்த இக்கோவில்கள் தற்போது, புதியதாக கருங்கற்களால் கருவறை, விமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் கட்டப்பட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இக்கோவில்களுக்கான கும்பாபிஷேகம்  இன்று  வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பேரூராதீனம் ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், இளைய பட்டம் மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். விழாவில், பேராசிரியர் சூரிய நாராயணன்," சிந்தனை துளிகளும், சிரிப்பு மலர்களும் என்ற தலைப்பில் பேசுகிறார். காலை 10.00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காரமடை, பிளிச்சி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !