உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப்பெருவிழா ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் ஜூலை 12 முதல் 16 வரை, அன்னம், சிம்மம் கருடன், சேஷ, ஆஞ்சநேயர், யானை, கற்பக விருட்ச வாகனங்களில் வீதியுலா நடந்தது. ஜூலை 17ல் சவுந்திரராஜ பெருமாள் சுவாமி சவுந்திரவள்ளி தாயாருக்கு திருநாண் பூட்டும் திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டம்: அன்று இரவு சுவாமியும், அம்பாளும் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜூலை 18 இரவு குதிரை வாகன வீதியுலா நடந்தது. நேற்று மாலை, ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்த கோஷங்களுக்கு இடையே தேரோட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் மருதராஜ், இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் மகேந்திரபூபதி வடம் பிடித்து துவக்கினர். அகரம் பேரூராட்சித் தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் ரவிசங்கர், தாடிக்கொம்பு பேரூராட்சித் தலைவர் அன்புச்செல்வி, துணைத் தலைவர் சுப்பிரமணி, செயல் அலுவலர் கணேசன், தாடிக்கொம்பு கூட்டுறவு சங்கத் தலைவர் முத்தையா, பி.ஆர்.டி. கன்ஸ்ட்ரக்ஷன் ராஜாதேவர், முத்துக்கிளி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !