உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் கோயிலில் மாயமாகும் காலணிகள்: தவிக்கும் பக்தர்கள்!

மடப்புரம் கோயிலில் மாயமாகும் காலணிகள்: தவிக்கும் பக்தர்கள்!

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி கோயிலில் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க பொறுப்பாளர் நியமிக்கப்படாதால் காலணிகள் திருடு போவதாக பிரச்னை எழுந்துள்ளது. மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார்,  பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது.  வெள்ளி, ஞாயிறு, செவ்வாய், ஆடி வெள்ளி உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது  வழக்கம். இது தவிர மதியம் நடைபெறும் உச்சி கால பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வர். பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க பாதுகாப்பு அறை செயல்பட்டு வருகிறது.  இதற்கு பொறுப்பாளர் அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டார். புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படாததால், பக்தர்கள் தாங்களாகவே காலணியை வைத்து  எடுத்து செல்கின்றனர். ஒரு சிலர் வேண்டு மென்றே புத்தம் புதிய காலணிகளை எடுத்துச்செல்வதால் பக்தர்களிடையே மோதல்  தினசரி ஏற்பட்டு வருகிறது. எனவே அறநிலையத்துறையினர் காலணி பாதுகாப்பு அறைக்கு புதிய பொறுப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !