செல்வியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :3480 days ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் கும்மியடித்தவாறு முளைப்பாரியை எடுத்து சென்று சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர். இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, திருஷ்டி கழித்தல் நடந்தது. தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழா முடிவடைந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.