காரிய சித்தி கணபதி கோவிலில் 23ல் சங்கட நிவாரண ஹோமம்
ADDED :3480 days ago
திருவள்ளூர்:காரிய சித்தி கணபதி கோவிலில், வரும், 23ம் தேதி, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த, பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் (இ கணபாக்கம்) கிராமத்தில், பழமையான பரிகார ஸ்தலமான காரிய சித்தி கணபதி, ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள காரிய சித்தி கணபதிக்கு ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று சங்கட நிவாரண ஹோமம் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான, சங்கட நிவாரண ஹோமம் வரும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கு இக்கோவிலில் நடக்கிறது. அன்றைய தினம் ஒன்பது வகையான பழங்களால் காரிய சித்தி கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ககார ஸகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. ஹோமம் முடிவடைந்த பின், மதியம், 2:00 மணியளவில் மகா தீபாராதனை நடைபெறும்.