மணிவாசகர் குருபூஜை விழா
ADDED :3376 days ago
அன்னுார்: அன்னுார் தமிழ்ச்சங்கம் சார்பில், மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இம்மாதம் மணிவாசகர் குருபூஜை விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு துவங்கி, மதியம் 12:00 மணி வரை, மகளிர் அணியினர் திருவாசகம் வாசித்தனர். தமிழ்ச்சங்க தலைவர் நடராஜன் பேசுகையில்,“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், என்பதே இதன் பெருமையை உணர்த்தும். செல்வமும், பதவியும் வாழ்வின் நோக்கமல்ல என்பதை உணர்ந்து, சிவவழிபாட்டை மேற்கொண்டு, சைவ குரவர்களில் முதன்மையானவராக இருந்தார். சிவம், ஞானம், போதம் குறித்து விளக்கமளித்தவர்,” என்றார். சங்க செயலர் அன்னாசிகுட்டி, நிர்வாகிகள் திருவேங்கிடம், பொன்னுச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.