சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: கேரள அரசு பச்சைக்கொடி!
ADDED :3376 days ago
புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்க்க மாட்டோம், என கேரள அரசு கூறியுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலில், குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பதில்லை; இது, நீண்டகாலம் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இந்த விவகாரத்தில், மக்கள், விவாதித்து முடிவு செய்ய வேண்டும். கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்க்க மாட்டோம். இடதுசாரி கூட்டணி அரசு கேரளாவில் பதவியில் இருந்தபோது தாக்கல் செய்த மனுவில் இதை குறிப்பிட்டுள்ளோம். அதன் பின், பதவிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, தன், நிலையை மாற்றிக் கொண்டது; கோவிலுக்குள் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.