செல்லபிராட்டி கோவிலில் ஆடி பவுர்ணமி உற்சவம்!
ADDED :3376 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு மகா ஜோதி தரிசனம் மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு சி த்தர் வழிபாடும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு சிறப்பு யாகம், லலிதா சகஸ்ர நாமம், அஷ்டோத்ர நாமாவலியும், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு கலச ஜையும், இரவு 11 மணிக்கு புஷ்பாஞ்சலியும், சிறப்பு வழிபாடும், இரவு 12 மணிக்கு மகா ஜோதி தரிசனமும் நடந்தது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை செய்தனர். இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.