உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகாம்பரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

மோகாம்பரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் மோகாம்பரி மாரியம்மன் கோவில் ஆடி செடல் உற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில் செடல்  விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை; இரவு அம்மன்  வீதியுலா நடக்கிறது. 7ம் நாளான நேற்று அம்மன் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி மாரியம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேக, தீபாராதனை  நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்தனர். இன்று மாலை செடல், தீமிதி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !