சாயல்குடி அருகே கடலில் கரை ஒதுங்கிய கிருஷ்ணர் சிலை
ADDED :3470 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கரை ஒதுங்கிய நிலையில் கிருஷ்ணர் சிலை மீட்கப்பட்டது. மூன்றரை அடி உயரம், முக்கால் அடி அகலம் கொண்ட கருங்கல்லால் ஆன இந்த கிருஷ்ணர் சிலை புல்லாங்குழல் ஊதுவதுபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் சிலை கரைஒதுங்கிய தகவலை அப்பகுதியைச் மீனவர்கள் மூக்கையூர் வி.ஏ.ஓ., பாலையாவிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.ஐ., மாரிமுத்து, கடலாடி தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் சிலையை மீட்டு கடலாடி தாலுகா அலுவலக பதிவறையில் பாதுகாப்பாக வைத்தனர். 200 ஆண்டு பழமை வாய்ந்த இக்கற்சிலை குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.