உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுாரில் கபிலர் விழா துவக்கம்

திருக்கோவிலுாரில் கபிலர் விழா துவக்கம்

திருக்கோவிலுார்: அறிஞர்கள், ஞானிகள் மற்றும் சாதுக்களின் கருத்துக்களை ஏற்று, நற்பண்புடன் வாழ வேண்டும்” என,  மணிவண்ணன்  சுவாமிகள் பேசினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம் சார்பில், சங்க கால தமிழ் புலவர்களில் ஒருவரான, கபிலரின்  நினைவாக, 41ம் ஆண்டு கபிலர் விழா, சுப்ரமணியர்  மகாலில் நேற்று துவங்கியது. மாலை 5:30 மணிக்கு கோடிலிங்கம் குழுவினரின் திருமுறை  இன்னிசை நடந்தது.பண்பாட்டுக் கழக செயலாளர் தனபால் வரவேற்றார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகளின் மகன் மணிவண்ணன்  சுவாமிகள், அருளாசி வழங்கி, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டும், முதுமையான மொழிகள். இவ்விரு  மொழிகளிலும் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமை, தென்னாட்டிற்கு உண்டு. குறிப்பாக, தமிழகத்திற்கு உண்டு. ஒரு மனிதன் முழுமை  அடைகிறான் என்றால், அவனிடம் அறம், தர்மம் இருக்க வேண்டும். இவை, நாம் யாருடன் பழகுகிறோம் யாரை பின்பற்றுகிறோம் என்பதை பொ ருத்துதான் அமைகிறது.

நமக்கு கிடைக்கும் நல்ல நண்பர்கள் சூழல்கள் நம்மை நல்லவனாக்க வல்லது. நம் பாரத தேசத்தில் பல அறிஞர்கள் ஞானிகள் சாதுக்கள் ÷ தான்றியுள்ளனர். நாம் அவர்களை நாடிச் சென்று, அவர்களின் நல்ல கருத்துக்களை ஏற்று, நற்பண்புடன் வாழ வேண்டும். சைவமும் வைணவமும்  திருக்கோவிலுாரில் சமமாக வளர்ந்துள்ளன. 108 திவ்ய தேசங்களில் 70க்கும் மேற்பட்ட ஸ்தலங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.  அதேபோல், ௧௦௦௮  வைணவ தலங்களில் அதிகமான கோவில்கள் இங்குதான் உள்ளன. தமிழகம் சிறந்த மனிதனை உருவாக்கும் புண்ணிய பூமியாக எப்பொழுதும் இ ருந்துள்ளது. இதில், குறிப்பாக திருக்கோவிலுாருக்கு மிகப்பெரும் பங்கு உண்டு. நட்பிற்கு இலக்கணமாக விளங்கிய கபிலர் நண்பரின் மகள்களை,  இங்குதான் மன்னர்களுக்கு மணமுடித்து கொடுத்த திருப்தியில், உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். பஞ்ச கிருஷ்ணரன்ய தலத்தில் ஒன்றுதான்  உலகளந்த பெருமாள் கோவில். அட்ட வீரட்டானத்தில் ஒன்று, வீரட்டானேஸ்வரர் கோவில். வைணவமும், சைவமும் கைகோர்த்துள்ள இங்கு, க பிலருக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்வோம்.இவ்வாறு மணிவண்ணன் சுவாமிகள் பேசினார். தென்னகப் பண்பாட்டு மைய ஆட்சிமன்றக்  குழு உறுப்பினர் அரிமளம் பத்மநாபன் குழுவினரின், நந்தனார் சரித்திர இசை அரங்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !