கிராமம் செழிக்க மழை வேண்டி மூலசமுத்திரத்தில் விளக்கு பூஜை
ADDED :3402 days ago
உளுந்துார்பேட்டை: மூலசமுத்திரம் கிராமத்திலுள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் கிராமம் செழிக்கவும், மழை வேண்டியும், உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜைகள், குத்துவிளக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உளுந்துார்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்திலுள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் கிராமம் செழிக்கவும், மழை வேண்டியும், உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு அம்மஷக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு குத்துவிளக்கில் ஸ்ரீமாரியம்மன் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.