உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்துமாரியம்மன் கோவிலில் 5ம் தேதி தீமிதி திருவிழா

புத்துமாரியம்மன் கோவிலில் 5ம் தேதி தீமிதி திருவிழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புத்துமாரியம்மன் கோவிலில் வரும் 5ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.  அதையொட்டி கடந்த 22ம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. 5ம்  தேதி மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி இரவு அரிச்சந்திரா என்னும் புண்ணிய புராண நாடகமும், 7 ம் தேதி இரவு  அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடக்கிறது. 12ம் தேதி மாலை ஊஞ்சள் உற்சவமும், திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.  ஏற்பாடுகளை பரம்பரை தர்மகாத்தா சீனு என்கிற ராமதாஸ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !