உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபம் வேண்டாமே!

கோபம் வேண்டாமே!

எந்தச் சூழலிலும் கோபமாகப் பேசுவதையும், பொய் சொல்வதையும் தவிர்க்க வேண்டும். கோபப்படுபவனை இறைவன் ஏற்பதில்லை. இவ்வாறு தவறு செய்தவர்கள் அந்தத் தவறுகளுக்காக மிகவும் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையாளன், கோபப்படாதவன், தவறுகளுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்பவன் ஆகிய மூவகையினரை மட்டும் இறைவன் மன்னிக்கிறான்.“உண்மைக்கு மாறாக பேசுவதை விட்டு, தன் நாவைக் காத்துக் கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்துவிடுவான். தன் கோபத்தை தடுத்துக் கொள்பவனை விட்டு, மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்பு கோருபவனை அல்லாஹ் மன்னித்து விடுவான்,” என்கிறார் நபிகள் நாயகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !