நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3403 days ago
புதுச்சேரி: நாகமுத்து மாரியம்மன் கோவி லில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 33ம் ஆண்டு செடல் திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி சுவாமி வீதியுலா நடந்தது. 22ம் தேதி நடந்த செடல் விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 23ம் தேதி சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா மாட வீதி வழியாக நடந்தது. செடல் திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் விடையாற்றி விழா, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய் தனர்.