200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாரண தீர்த்தம் புனரமைப்பு!
ADDED :3403 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மணலில் புதையுண்ட 200 ஆண்டு பழமையான நாரண தீர்த்தம், விவேகானந்த கேந்திரம் சார்பில் புனரமைக்கப்பட்டு புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது. 200 ஆண்டுக்கு முன்பு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், தீவில் உள்ள 104 தீர்த்த ங்களில் நீராடினர். காலபோக்கில் இத்தீர்த்தங்கள் பல காணாமல் போனது. மண்ணுக்குள் புதையுண்ட தீர்த்த குளங்கள், விவேகானந்தா கேந்திரம், பசுமை ராமேஸ்வரம் இயக்கம் சார்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஓலைக்குடாவில் உள்ள நாரண தீர்த்தம் முக்கியத்துவம் வாய்ந் ததாகும். இதில் நீராடினால் நுண்ணறிவு, தெளிவான முடிவு எடுத்தல், அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை விவேகானந்தா கேந்திர ஊழிய ர்கள் புனரமைத்துள்ளனர். தீர்த்த குளத்தை பராமரிக்கும் பொறுப்பு ஓலைக்குடா மீனவர்களிடம் ஒப்படைக்கபட்டது.