வீணையுடன் தட்சிணாமூர்த்தி!
ADDED :3759 days ago
ஊர்த்துவ ஜானு தட்சிணாமூர்த்தி என்னும் பெயர் கொண்ட தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் காட்சியளிக்கிறார். இந்த சிலையை திருவலஞ்சுழியில் கண்டெடுத்தனர். இவரது கையில் இருந்த வீணை சிதிலமாகி விட்டது. ஒரு காலை கீழே ஊன்றி, மற்றொரு காலை முயலகனின் மீது வைத்த கோலமே ஊர்த்துவ ஜானு’ எனப்படும். மற்ற தலங்களில் தட்சிணாமூர்த்தியின் பாதம் முயலகனின் முதுகின் மீது இருக்கும். இங்கு அவனது தலை மீது பாதம் உள்ளது.